Sinhala (Sri Lanka)English (United Kingdom)
சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளீர் விவகார அமைச்சு
முகப்பு கேள்விகளும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்

  1. ஒரு பிள்ளையை சுவீகாரம் எடுப்பது எப்படி?

    சட்டப்படி திருமணமான, பிள்ளைகள் இல்லாத தாய், தந்தையர்களாக இருப்பின், பிள்ளையொன்றை சுவீகாரம் எடுக்க வேண்டுமானால் உங்களுடைய எழுத்து மூலமான விண்ணப்பத்தை பிரிவுக்குப் பொறுப்பான நிலையப் பொறுப்பு நன்னடத்தை உத்தியோகத்தருக்கு அல்லது சிறுவர் பாதுகாப்பு சேவை ஆணையாளருக்கு அனுப்புக.
     
  2. சிறுவர் இல்லமொன்றைப் பதிவு செய்வது எப்படி?

    தொண்டர் சிறுவர் இல்லமொன்றைப் பதிவு செய்யும் விண்ணப்பத்தையும் பீ படிவத்தையும் நிரப்பி நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவை ஆணையாளருக்கு அனுப்புக.
     
  3. பிள்ளையொன்றை இல்லத்தில் சேர்க்கும் முறை:

    பிள்ளையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாதவிடத்து பொருளாதார கஷ;டம் உள்ள பிள்ளையை வளர்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கும் சந்தர்ப்பத்தில்: 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் தொடர்பில் உங்களுடைய பிரிவுக்குப் பொறுப்பான நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் அல்லது நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவை ஆணையாளரிடம் அனுப்புக.
     
  4. சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் யாவை?

    இதுபற்றி அறிந்தவுடன் பிரிவுக்குப் பொறுப்பான நன்னடத்தை   உத்தியோகத்தருக்கு அறிவிக்கவும்.
     
  5. சிறுவர் உரிமைகள் மீறப்படுகின்றபோது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

    பிரதேச செயலாளர் அலுவலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அல்லது நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவை ஆணையாளருக்கு அறிவிக்கவும்.
     
  6. பிரிந்துபோயுள்ள குடும்பமொன்று குடும்ப ஆலோசனையைப் பெறும் முறை:

    பிரதேச சேவையாளர் அலுவலகத்தில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு   உத்தியோகத்தரை அல்லது நன்னடத்தை உத்தியோகத்தர்களைச் சந்தித்து கலந்துரையாடுக.
     
  7. சிறுவர் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டிய முறை:

    அருகில் உள்ள பொலிசுக்கு, நன்னடத்தை உத்தியோகத்தர், தொழில் உத்தியோகத்தர் அல்லது நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவை ஆணையாளர் ஆகியோருக்கு அறிவிக்கவும்.
 
செப்டம்பர் 2019
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5